வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்.
அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –85200வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் –77467வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி தீபலக்ஷ்மி –3950வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி , திமுக விட7733வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.