திமுகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர், இன்று ஆளும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வு தொடர்பாக, ஈவு இறக்கம் இல்லமால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கண்டனங்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதன் பின்னர், அதிமுககாரர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மேடையில் இருந்த இ.பி.எஸ், லேசாக கண் சொருகி, அருகில் உள்ள நபரிடம் கூறி லேசான மயக்கத்துடன் கிழே சரிகிறார். உடனே அருகில் இருந்தவர்கள், அவரை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்து மேடையில் அமர வைத்து விட்டனர்.