Election2024 : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல். – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று கரூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர் நேற்று பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த மாவட்டத்துல ஒருத்தர் இருந்தார், பேரு செந்தில் பாலாஜி. […]
Election2024 : தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சார வேலையில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே போல அரசியல் வெற்றி கருத்து கணிப்புகளையும் பல்வேறு அரசியல் பிரபலங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்புள்ளது என அதிமுக எம்எல்ஏ ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த மதுரை, திருப்பரங்குன்றம் […]
Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது,அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை […]
Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
Udhayanidhi Stalin : நான் காலில் விழுவது போல போட்டோ காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் – உதயநிதி ஸ்டாலின். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதியும் மாறி மாறி பிரச்சார மேடைகளில் பதில் கூறி வருகின்றனர். எய்ம்ஸ் செங்கல் : அமைச்சர் […]
Election2024 : இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். வரும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சியான அதிமுக இறைபக்தியுடன் எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் . வழக்கமாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்னர் சேலம் மாவட்டம் […]
Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு பாஜக, அதிமுக என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக தரப்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவும், பாஜக தரப்பில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்தது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]
ADMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில்நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். நேற்று 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானதை அடுத்து இன்று மீதம் உள்ள 17 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பெயர் ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமி வெளிஇட்டுள்ளார். ஸ்ரீபெரும்பதூர் -டாக்டர் ஜி.பிரேம்குமார். வேலூர் – டாக்டர்.எஸ்.பசுபதி. தர்மபுரி […]
ADMK : தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் துவங்கி உள்ளது. Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.! தமிழகத்தில் முதற்கட்டத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஒன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் என்பதால், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் […]
OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். Read More – தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.! பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் […]
ADMK-PMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக இன்னும் தங்கள் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடை இறுதி செய்துவிட்டது. இன்னும் சில தினங்களில் திமுகவுக்கு என்னென்ன தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் , யார் வேட்பாளர்கள் என்ற விவரங்கள் வெளியாகிவிடும். Read More […]
ADMK Protest : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு […]
மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். மதுரையில் திமுக – அதிமுக : மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. […]
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி விட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி – ஈபிஎஸ்..! தற்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக கட்சியின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக பொறுப்பேற்றது […]
திமுக எம்.பி ஆ.ராசா எம்.ஜி.ஆர்அவர்களை இழிவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் உடல்நலகுறைவால் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதளத்தில் […]
இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, “அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நன்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. போராடக்கூடிய விவசாயிகள் மீது கூட குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. திமுக […]
இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாநாடு : அதற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அவர் பேசுகையில், என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. […]
இன்று சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பல்வேறு முக்கிய அதிமுக பிரமுகர்கள் மற்றும் […]