83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை! முதல்வர் பெருமிதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர்

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார்.

மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் காலங்களில் இந்த மாதிரியான தவறு நடைபெறாமல் இருப்பதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் தமிழை பெருமைப்படுத்தும் விதமாக பேசியதற்கு பெருமை கொள்வதாக தெரிவித்தார்.