சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டே கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி என […]
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ ட்ரெண்ட் ஆகிராறோ இல்லையோ தற்போதைய தலைமுறைகளிடம் கதாநாயகி கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகி விடுகிறார். அந்த வகையில், டிராகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் தற்போது பல இளைஞர்களின் புதிய கனவுக் கன்னியாக அவர் மாறியுள்ளார். அட ஆமாங்க… நடிகை கயாடு லோஹர் தான் இன்றைய இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக […]
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வருகை தந்தனர். அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்துள்ளனர். குறிப்பாக, நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் […]
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பேருந்து விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என […]
சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பேசினார். ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி தற்போது […]
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக இணைந்து கொண்டு பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தியபோது சில பெண்கள் கதறி அழுதுகொண்டு உள்ளார்கள். அப்போது பாமக எம்.எல்.ஏ அருள் திடீரென மிகவும் கோபமடைந்து அங்கிருந்த பெண்களுக்கு முன் உங்களுடைய வீட்டில் ஆம்பள இல்லையா? எதற்காக இங்கு வரவில்லை என்பது போல மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.அவர் பேசியதை பார்த்து சில பெண்கள் தங்களுடைய கைகளையும் […]
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மாணவர்களை அதிலும் அரசு பள்ளி மாணவர்களை வேலை வாங்கும் நிகழ்வு என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிழக்கு ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் என்பவர் , பள்ளி மாணவர்களை கால் அழுத்திவிட கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து […]
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் […]
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் […]
சென்னை : சுதந்திரதினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் உள்ளூர் விமான டிக்கெட் விலை தற்போது கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 15 (வியாழன்) சுதந்திரதின பொது விடுமுறையை அடுத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என அடுத்தடுத்த நாட்களில் பெரும்பாலான நிறுவனங்கள், கல்வி மையங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகர் சென்னையிலிருந்து பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இம்மாதிரியான தொடர் விடுமுறை நாட்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். […]
சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து […]
சேலம் : அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
மேட்டூர் : கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதால் காவேரி மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய நாள் மேட்டூர் அணியில் 100 அடி எட்டிய விலையில், இன்று காலை நிலவரப்படி 107 அடியை தொட்டது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த […]
மேட்டூர் : கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது, இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தன. இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு இடங்களில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கிருஷ்ணராஜ் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று அந்த அணையிலிருந்து வினாடிக்கு 1.31 லட்ச கன அடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீரும் என […]
மேட்டூர் அணை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் […]
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு சென்னை பெரம்பூர் அருகே, பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யபட்டார். இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டம் ஒழுங்கு பற்றி […]
சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி சென்று கொண்டிருக்கையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார். அப்போது சஞ்சீவிராயன்பேட்டை […]
Edapadi Palnisamy: மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கியதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, புயல், மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய […]
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்தவகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க […]