தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பொய்ப் புகார் கூறிவருகிறார் – ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi has said that the DMK's case was the cause of Jayalalithaa's death as a planned lie.

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருவதை குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை என்றும்  ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அப்போது பாமக கோரிக்கை வைத்தது எனவும் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என பொய் புகார் கூறி வருகிறார் என விமர்ச்சித்துள்ளார்.