கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
எனவே கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கு ஆன்லைனில் நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில் கொரோனாதடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுகசார்பில்முதலமைச்சரின்பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. மேலும் நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
unknown node