டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக – ஹெச்.ராஜா..!

H. Raja said that the person who stabbed Delta farmers in the back was DMK and the person who stabbed was Karunanidhi.

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என கூறினார். உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிவித்தார்.

திமுக சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாஜக தான், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.