இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்–456070வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம்–445629வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி–25296வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம்10441வாக்குகள் ஆகும்.இன்னும்63849வாக்குகள் எண்ணப்படவேண்டியுள்ளது.தற்போது வரை961103வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.