அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்த திமுகவினர் ...!

The DMK has caused a stir by hiding the picture of Jayalalithaa in the Amma restaurant and pasting the picture of the Chief Minister and Karunanidhi.

அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து முதல்வர் மற்றும் கருணாநிதியின் படத்தை திமுகவினர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா உருவப்படத்தை இன்று காலை திமுகவினர் மறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தை ஒட்டி உள்ளனர். ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும், மற்றொருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த அதிமுகவினர் அங்கு ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்த திமுகவினருடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை அகற்றி, பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்த திமுகவினர் ...!