அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து முதல்வர் மற்றும் கருணாநிதியின் படத்தை திமுகவினர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா உருவப்படத்தை இன்று காலை திமுகவினர் மறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தை ஒட்டி உள்ளனர். ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும், மற்றொருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஒட்டியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த அதிமுகவினர் அங்கு ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்த திமுகவினருடன் […]
புதுக்கோட்டையில் இயங்கி வரக்கூடிய அம்மா உணவகத்தில் இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் இலவச உணவு வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்துள்ளார். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது அம்மா உணவகம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏழை எளிய மக்கள் அனைவரும் மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வாங்கி உண்டு வந்தனர். […]
பொதுமுடக்கம் நீட்டிப்பால் இலவச உணவு தருவதும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் மக்களுக்காக பல்வேறு தரப்பினர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும், வறுமையில் வாடும் மக்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த […]
சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் காரணத்தால் நேற்று மட்டும் 203 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி […]