வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்த திமுக, அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பரிசுப்பொருள்கள், பணப்பட்டுவாடா செய்பவர்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செய்து கைது செய்தும், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி வீட்டு வசதி குடியிருப்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பட்டியலுடன் வீடு வீடாக சென்று பணம் கொடுத்த அதிமுகவை சார்ந்த சரஸ்வதி, அம்சவேணி கைது செய்யப்பட்டனர்.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே குள்ளம்பட்டியில் வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.