கொரோனா நிவாரண நிதிக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், பின்னர் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர். அதில், முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான கொரோனா நிவாரண நிதிக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
unknown node