தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பரவாயில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

The Madurai branch of the High Court has said that corona prevention measures are okay in Tamil Nadu.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி செலுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் கூறினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து.