இந்தியாவில் இதுவரை 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்!!

The incidence of corona in India has increased from 3,11,74,322 to 3,12,16,337, according to the Union Ministry of Health.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,977 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 3,998 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 2.27%, தொடர்ந்து 30 நாட்களுக்கு 3% க்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,90,687 ஆக உள்ளது.

குணமடைந்தோரின் விகிதம் 97.7% ஆகவும், உயிரிழப்பின் விகிதம் 1.34% ஆகவும் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,14,482 லிருந்து 4,18,480 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு சேர்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4,07,170 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டில் இதுவரை 41,54,72,455 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.