பொங்கல் பண்டிகையையொட்டி ராகுல் தமிழகம் வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

Congress Rahul Gandhi to visit Tamilnadu during Pongal2021 festival, he is going to Madurai's Avaniapuram and spectate Jallikattu

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.