இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் ...!

Congress MLA Aditi Singh UP today joined the BJP in the presence of BJP leader Swatantra Dev Singh.

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபலி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தான் அதிதி சிங். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பல முறை கட்சிக்குள்ளேயே இவருக்கு கருத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களையும் அடிக்கடி விமர்சித்துள்ளார்.

காங்கிரசில் இருந்த போதும் பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வந்த அதிதி, தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் பாஜகவில் இணைந்துள்ளது கட்சியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.