கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேச்சு.
சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்.
தொழில் முனைவோர்கள், அருகில் உள்ள கல்லூரிகளுடன் நல்ல தொடர்பில் இருங்கள். இதற்கு கல்லூரிகளும் ஒத்துழைக்க வேண்டும்; படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு போய் பயிற்சி பெறும் உணர்வை மாணவர்களிடம் நீங்கள் தான் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.