தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் […]
தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு. தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. புதுமை பெண் திட்டத்தில் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு […]
கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேச்சு. சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர […]
கொளத்தூர் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் பகுதியில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன்படி, கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார்.
கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிப்பு. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கான பணிகள் […]
கேரளாவில் மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் சிஇடி என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அசோசியேசன் சார்பில் நிழல் கொடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சிலர் அசோஸியேஷனில் புகார் அளித்தனர். இதனை எடுத்து அசோசியேசன் […]
உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை […]
கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்ததும் 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு பட்டங்களை தரவேண்டும் என யுஜிசி உத்தரவு. பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் யுஜிசி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும்,மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.பட்டங்களை தாமதமாக வழங்குவது,மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் […]
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆப்சென்ட் […]
ஜூனியர்களை ராகிங் செய்ததாக செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. கொல்லம் பொது மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு […]
சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு […]
மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜனவரி […]
அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு […]