சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி, வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். […]
விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் ஜனவரி 22 -ஆம் தேதி முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி சீமான் பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாகவே சீமான் பெரியார் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக நேற்று கூட ” பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். கர்நாடகா […]
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதனையடுத்து, இன்று நடைபெற்ற 5-வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுக்க கோரி பேசினார்கள். குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் பேசும்போது ” விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காட்டுப்பன்றிகளை […]
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் தந்தை பழனிவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 […]
சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறையில் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள 15 திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவை, அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 6 புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 21 […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்தார். அதனை அடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜூலை 13இல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி துவங்கியது. இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் […]
Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் […]
Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி. Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து […]
Ponmudi :தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் பொன்முடி. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. Read More – நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் […]
Supreme court: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் இழந்த எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி பொன்முடிக்கு மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. Read More – 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், 24 தொகுதிகளில் தாமரை சின்னம்.! அண்ணாமலை அதிரடி […]
TN Govt : பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், மீண்டும் அவருக்கு எம்எல்ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் சூழலில் உருவாகியுள்ளது. Read More – பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி மறுப்பு அந்தவகையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் […]
R.N. Ravi: தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதை அவர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தகால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. Read More – தேர்தல் பத்திரங்கள்! லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக: CSKவிடம் ரூ. 4 கோடி பெற்ற அதிமுக இந்த வழக்கில் […]
Ponmudi : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இதனை எதிர்த்து […]
Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்ததை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். Read More – இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்… நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை! அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் […]
Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். […]
சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை […]
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக, ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, அளவுக்கு […]
கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச […]
கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 3 […]
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் […]