கொரோனா சித்த மையத்தை திறந்து வைத்த முதல்வர்..!

Tamil Nadu Chief Minister MK Stalin inaugurated the Corona Siddha Treatment Center at Meenambakkam, Chennai.

சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்த சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில்  பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், சித்த மருத்துவம் மூலம்  கொரோனாவை  கட்டுப்படுத்த ஒரு முயற்சியாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 12 இடங்களில் சித்த மற்றும் அலோபதி சிகிக்சை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்த சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தனியார் கல்லூரிகளில் 140 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 70 படுக்கைகள் சித்த மருத்துவத்திற்கும், 70 படுக்கைகள் அலோபதி மருத்துவத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.