அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 4,092 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி,மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் […]
சித்த மருத்துவமனையின் கட்டளை மையத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென யோகா செய்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம் திறந்து வைக்கப்பட்டது. இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையை மேற்பார்வையிட ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் […]
மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது. மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது […]
சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்த சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், சித்த மருத்துவம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு முயற்சியாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 12 இடங்களில் சித்த மற்றும் அலோபதி சிகிக்சை […]
சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்மீது குண்டாஸ் பாய்ந்தது. இந்தநிலையில், திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து […]
சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சித்த மருத்துவத் துறைக்கு ரூ.437 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவ துறைக்கு 10 ஆண்டுகளில் ரூ.3000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. பிற மருத்துவத் துறைகளை காட்டிலும் சித்த மருத்துவத்திற்கு குறைவான நிதி […]
முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் தலைமையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.கொரோனா நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கபப்டுகிறது.மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு முதலமைச்சர் ஆரோக்கியம் […]
சித்தா கொரோனா பராமரிப்பு மையத்திற்காக மேலும் 1,000 படுக்கை வசதிகளை அமைக்க சென்னை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. சாலிகாராம் சித்தா வசதியிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து 90 வயது முதியவர் உட்பட 569 நோயாளிகள் குணமடைந்த நிலையில், நோயாளிகளுக்கு சித்த சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சாலிகாராம் சித்த மையத்திலிருந்து நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பும் விழாவில் பங்கேற்ற சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்த சிகிச்சையும் அலோபதி மருந்துகளும் நோயாளிகளை […]