ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

The Chief Minister today discussed whether the curfew could be extended as the curfew ends on June 28 and what further relaxations could be made.

ஜூன் 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா மேலும் கூடுதல் தளர்வுகள் என்ன என்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.இந்நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக முதல்வர், அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறார்.

அதன்படி ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீடிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இன்று 11 மணியளவில் சுகாதார துறை அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பதாக முக்கியமான அறிவிப்புகள் சில வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.