தமிழகத்தில் இன்று ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். இன்று முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 8,801 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், இராஜீவ் […]
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார வாகன தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் […]
வேலூர் மாவட்டம் நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்” வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், கணியம்பாடி உள்வட்டம், நாகநதி கிராமத்தில் நேற்று (23.02.2024) நடைபெற்ற எருது விடும் விழாவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவத்தில் வேலூர் வட்டம், அரியூர் மதுரா திருமலைக்கோடியைச் சேர்ந்த ராம்கி (வயது 24) த/பெ.சுப்பன் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி […]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 500-வது விக்கெட்டை எடுத்தார். இவர் இந்த சாதனையை 98-வது டெஸ்ட் போட்டியில் செய்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே நேரத்தில் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 9-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இதற்கு முன் முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் […]
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் இரண்டு தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுவரையறை இரண்டுமே ஜனநாயகம், கூட்டாட்சி முறைக்கு எதிரானது. தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. மாநில அரசுகள் பல்வேறு […]
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 […]
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்புகள் விடுத்தார். சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலக அமைப்பில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீடுக்கு முதலமைச்சர் முன்னிலையில் […]
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு […]
மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் […]
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாத்ரித்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு […]
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 55) விருதுநகர் வட்டம், கன்னிசேரி புதூர் கிராமத்தைச் […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து இன்று இராமலிங்கம் பிள்ளை , வீரமாமுனிவரின் சிலையை திறந்து வைத்தார். மேலும் சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். அதன்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவு சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். யாருடன் கூட்டணி- கமல்ஹாசன் ஆலோசனை..! […]
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி பெற்றது. சமூக நீதிக்கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணைக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலம் மாநாடு உணர்த்தியுள்ளது. காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள், இந்த நிலைதான் ஆளுநர் ஆர்.என் ரவி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் அறியாமல் ஆளுநர் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார். தமிழ்நாட்டின் […]
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 […]
சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு தொடங்கியது. இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் நேற்று மாலை மாநாட்டு திடலில் திரண்டு வந்தனர். இதையெடுத்து, நேற்று மாலை 1,500 டிரோன்களின் வர்ணஜாலம், பைக் பேரணியுடன் மாநாடு களைக்கட்ட தொடங்கியது. திமுகவின் இளைஞரணி முதல் மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலி நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சென்னையில் 100 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ரூ.37.98 கோடியில் 100 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்லவன் இல்லத்தில் புதிய பேருந்துகளை கொடியசைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.634.99 கோடி மதிப்பில் அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் புதிதாக 1,666 பி.எஸ்.6 (BS6 ) பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக 100 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொடியேசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். […]
ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். ஜனவரி 23-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலை. துணைவேந்தர் விசாரணைக்கு தடை..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என வருடந்தோறும் தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது ரூ.1,000 வழங்குவதற்கான […]