#Breaking:ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது,வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்கி வந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் சென்னை கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்நிலையில்,தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தி.நகர் ஒப்பந்தகாரர்கள் கமிஷன் பெற்றுள்ளனர்.மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டும் முறையாக எந்த பணிகளும் நடைபெறவில்லை.அந்த நிதி என்ன ஆனது?,முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது.

எனவே,தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

#Breaking:ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – முதல்வர் ஸ்டாலின்!