கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம் கோரிக்கை. கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது […]
பொதுப்பணித்துறையின் கட்டுமான பணிகளில் சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 27.08.2021 அன்று சட்டப் பேரவையின் அவையில் பொதுப்பணித் துறைக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது,பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிற்குள்ள சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் (தனி ஒப்பந்தம்) மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் சிவில் மற்றும் மின்சாரப் […]
சென்னை:தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது,வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு […]