மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

Chief Minister MK Stalin is consulting with district collectors on the Corona detention operation.

கொரோனா தடுத்து நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு,  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை முடிந்த பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.