தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.!

Udayanithi Stalin, who has won the assembly seat in Chepauk, met and congratulated Temujin leader Vijayakanth.

சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தற்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

அந்த வகையில், சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்து, சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய நிலையில், அதற்கான வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்கே சுதீஷ், உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனைதொடர்ந்து, சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ அலுவலகத்திற்கு சென்று மாநில செயலாளர்களை சந்திக்கவுள்ளதாகவும், இதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை வளசரவாக்கம் இல்லத்தில் சந்திக்கிறார்.