கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!!

The Supreme Court has directed the Center to immediately supply 490 metric tonnes of oxygen to Delhi.

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கைகள் என தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

அந்தவகையில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 8 கொரோனா நோயாளிகள் பேர் உயிரிழந்துள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கடந்த வாரம் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது எனபது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், தலைக்கு மேல் வெள்ளம் போன்ற சூழல் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி பத்ரா மருத்துவமனையில் 8 பேர் இறந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கை பாயும் எனவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.