#BREAKING: சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

CPCID files chargesheet against Special DGP in Villupuram court over sexual harassment of female IPS officer

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்திருந்தனர். தற்போது, தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 100க்கும் மேற்பட்டோர் சாட்சியர்கள் சேர்த்துள்ளதாகவும், ஐ.ஜி., டி.ஐ.ஜி மற்றும் 2 எஸ்.பி.க்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன எனவும் தகவல் கூறப்படுகிறது.