அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி […]
காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் இறந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல். சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலக காலனி காவலர்களுக்கு எதிரான வழக்கில் 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. இதில், தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், […]
விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி […]
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி ஆகியோர் மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைக்காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகி வெளியே வந்தார். இதனையடுத்து, சிறையில் […]
பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக […]
தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14- ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்ப்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில், தற்போது 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று […]
ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் . காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குறித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால தாமதம் ஆகிறது. வழக்கு விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் […]