#BREAKING: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை.!

Chief Electoral Officer Satyaprada Sagu consults with district election officials regarding election arrangements.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தலுக்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும். தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.