விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பெயரில் இவ்விருது இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேஜர் தயான் சந்த் இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்றும் நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு மரியாதை அவரது பெயரால் சூட்டப்படுவது பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி இருப்பதாலும், ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு அரையிறுதி வரை சென்று வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node