#BREAKING: பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை – மத்திய அரசு விளக்கம்

NSO to run Pegasus spy software The federal government explained that no business had taken place with the company.

பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கம்.

இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதனிடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த மழைக்கால  கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வரும் சூழலில், என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.