#Breaking : ஊரடங்கு நீட்டிப்பு... இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி!

With the extension of the curfew in Tamil Nadu and the announcement of relaxations, meat shops have been given permission to operate from 6 am to 5 pm from June 7.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 7 ஆம் தேதி முதல் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி, ஜூன் 7 ஆம் தேதி முதல் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.