#Breaking:அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் – ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர்.அதன்பின்னர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என145தடைஉத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள புகாரில்,அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வந்த பிரச்சார வாகனத்தில் கொண்டு சென்று விட்டதாகவும்,அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,ஓபிஎஸ்,வைத்திலிங்கம்,ஜேசிடி பிரபாகரன்,மனோஜ் பாண்டியன்,புகழேந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.