சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..! இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ” மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும், அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யலாம். […]
அதிமுக கலவர வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இன்று நேரில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில்,அதிமுக […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் […]
சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்த வேளையில்,சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்.பொதுக்குழுவுக்கு ஈபிஎஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் ஓபிஎஸ் வரவுள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ள நிலையில்,தற்போது ஓபிஎஸ் கட்சி தலைமை […]
சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல காலை 6.30 மணிக்கே புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் […]
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,சென்னை,அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதன்படி,பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்தா பரபரப்பான நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.தனது இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில்,தற்போது ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.மேலும்,தனது ஆதரவு […]
சென்னை:எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அதிமுக கழக நிறுவன தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் ஜனவரி 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும்,இந்நாளில் எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்க உள்ளார்கள் என்றும்,இந்த நிகழ்ச்சியில்,அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் […]
சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்படும் என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ என தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.அதன்படி,அலுவலகத்தின் முன்பு “எம்.ஜி.ஆர். மாளிகை” என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. […]