#Breaking: இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன் – முக ஸ்டாலின்

mk Stalin posted on his Twitter page that he had taken the second dose of corona vaccine today.

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன் என்று முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் என கூறி, நம்மையும் – நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 68 வயதான முக ஸ்டாலின் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node
#Breaking: இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன் – முக ஸ்டாலின்