#breaking: அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

Edappadi Palanisamy consults with AIADMK MLAs at Chennai Kalaivanar Arena.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சட்ட பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே, பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு பற்றி இன்றே விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மனு தாக்கல் செய்தார்.

#breaking: அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!