ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பெங்களூரு புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]
தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில் திமுக […]
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மனு தள்ளுபடி. பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செப்டம்பர் 14ம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சட்ட பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்று […]
தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய கொடியை அவமதிக்கவில்லை என்றும் களங்கமான தேசிய கொடியை தான் முதல்வர் ஏற்றப்போகிறாரா என்று மட்டுமே கேள்வி கேட்டேன் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்கவும் மனுவில் கோரிக்கை […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் விளக்கம். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]
கோடநாடு வழக்கில் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து […]
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று தொடக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் 87 வயதான திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம், […]
அண்ணா தொழிற்சங்க தேர்தல் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் என அதிமுக அறிவிப்பு. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, வருகின்ற 14.08.2021, 22.08.2021, 29.08.2021, 07.09.2021 மற்றும் 17.09.2021 ஆகிய […]
தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து அவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் […]
நடப்பாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியீடு. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30% இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலை நாட்டினார்கள். […]
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம். திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி, திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் […]
மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் நியமனம் கணேசன் என்பவரை நியமனம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலக் கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கணேசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் எனவும் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு. சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் வழங்கியுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் […]
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நீண்ட நேரமாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய 3 மணி நேரமாக நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் […]
எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர் இழுபறி நீடிக்கும் நிலையில், அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை தற்போது தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை முடிந்த பின் எதிர்க்கட்சி தலைவர் யார் […]
வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று, வரும் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதன்பின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் […]