அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,அதிமுக பொருளாளராக தான் இருப்பதால்,தன்னை கேட்காமல் எந்தவொரு வரவு-செலவு கணக்குகளையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது எனவும்,அதிமுக கணக்குகளை யாரும் கையாள அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
unknown nodeunknown node