#BREAKING: திமுக எம்பி ஆ.ராசா 48 மணிநேரம் பரப்புரை செய்ய தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

The Election Commission of India has issued an order banning DMK MP A. Rasa from campaigning for two days.

திமுக எம்பி ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் 48 மணிநேரத்திற்கு திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் பரப்புரையில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளித்ததை தொடர்ந்து, மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அதிமுக தரப்பில், திமுக எம்.பி ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கூறியிருந்த நிலையில், நேற்று ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

unknown node