#BREAKING: சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி அப்பாவு தேர்வு!!

DMK MLA Appavu was elected as the Speaker of the Tamil Nadu Legislative Assembly without contest.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வானார்.

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அப்பாவு போட்டியின்றி தேர்வானார். துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிட்சைண்டியும் பிச்சாண்டியும் தேர்வாகியுள்ளார்.

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான அப்பாவு சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர். 1996ல் தமாகா சார்பிலும், 2001ல் சுயட்சையாகவும், 2006ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். மேலும், 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற அப்பாவு, தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

#BREAKING: சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி அப்பாவு தேர்வு!!