சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று சபாநாயகர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில், அங்கு கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, […]
சென்னை : தமிழகத்தில் ஜூன் 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, நாளை மறுநாள் ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாள்கள் குறித்தும், எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். இதன்பின், பாஜக ஆதரவுடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை […]
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை. இலங்கையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனிடையே அரசுக்கு எதிராக நடைபெற்ற […]
சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். […]
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வானார். தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அப்பாவு போட்டியின்றி தேர்வானார். துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிட்சைண்டியும் பிச்சாண்டியும் தேர்வாகியுள்ளார். ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான அப்பாவு சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர். 1996ல் தமாகா சார்பிலும், 2001ல் சுயட்சையாகவும், 2006ல் திமுக […]
ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை காலை தொடங்கவுள்ளது. இந்த கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நாளை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளனர். இதனால் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுள்ளார். தற்காலிக சபாநாயகராக […]
தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரிடம் சபாநாயகர் தனபால் விசாரணை நடந்தி வருகிறார். தமிழகத்தில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை […]
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது 31-ம் தேதியுடன் முடிவடைகிறது .31-ம் தேதி அன்று காலை ,மாலை சட்டசபை நடைபெறும் என சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். மேலும் சிந்தியா ஆதரவு மந்திரிகள் 6 பேர் உட்பட 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் பிரஜாபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராஜினாமா கடிதத்தை ஏன் வழங்கவில்லை..? இந்த முடிவை தாங்களாகவே எடுத்தீர்களா..? அல்லது மற்றவர்களின் நிர்பந்தயத்தில் ராஜினாமா செய்தார்களா..? […]
தமிழக சட்டப்பேரவைகூட்டம் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கி கடந்த 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நாள்களில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி பல்வேறு கவன ஈர்ப்பு திட்டங்களை கொண்டு வந்தனர்.அதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை […]
17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும் மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.கடந்த 17 -ஆம் தேதி மக்களவை கூடியது. இதனால் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார். புதிய எம்.பிக்களுக்கு […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில் வருகின்ற 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை தற்காலிக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஸ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி மக்களவை கூட்டம் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்து வரும் 30 ஆம் […]
புதுச்சேரி : கோவில் திருவிழாக்களில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது. 10, +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கியை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.