#BREAKING: கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா..!

Kerala state BJP leader Surendran has been diagnosed with corona infection. He has been admitted to Kozhikode MIMS Hospital

உலக முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.

ஒரு வருடம் ஆகியும் கொரோனா வைரஸை முழுமையாக தடுப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இந்த கொரோனவால் இன்னும் சில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

unknown node

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுரேந்திரன் நான் கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என வந்ததால் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சமீபத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.