பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதியானது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது ட்விட்டரில் , லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில், பாசிட்டிவ் வந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node