#BREAKING: இன்று ஒரே நாளில் 12 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

The number of corona infections has reached a new high in a single day today in Tamil Nadu.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,37,711 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,789 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மேலும் 59 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,526 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 9,34,966பேர் வீடு திரும்பியுள்ளனர். 89,428 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,15,653 பேரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node