#Breaking: தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு!!

An urgent case has been filed in the Chennai High Court seeking the implementation of a full curfew in Tamil Nadu.

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலையை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

மேலும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு வரும் 6ம் தேதி முதல் காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு;மே 6 முதல் அமல்!