#BREAKING: அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை..!

Tamil Nadu BJP leader L Murugan and Pon Radhakrishnan are holding talks with AIADMK executives regarding the distribution of constituencies.

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக அதிக இடங்களை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக  நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்று இரவு 3 மணிநேரம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் முதல்வர், துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாஜக  நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.