#BREAKING: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.!

Aam Aadmi Party MLA Somnath Bharathi has been sentenced to two years in jail by the Delhi High Court.

ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரியை தாக்கி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு தற்போது இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 149 (சட்டவிரோதம்), 147 (கலவரத்திற்கான தண்டனை) மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 2021 ஜனவரியில் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்ததை அடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தனது தண்டனை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.